Friday, August 10, 2018

சிறுபான்மையின மாணவர் கல்வி உதவித்தொகை

சிறுபான்மையின மாணவ - மாணவியர், கல்வி உதவித்தொகை பெற, செப்டம்பர், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மத்திய அரசால், சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள, இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த, மாணவ -- மாணவியருக்கு, ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை படிப்போருக்கு, பள்ளி மேற்படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை பெற விரும்புவோர், மத்திய அரசின், www.scolarship.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவ - மாணவியர் பதிவு செய்த, மொபைல் போன் எண், இணையதளத்தால் சரிபார்க்கப்பட்ட பிறகு மட்டுமே, விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்படும்.பதிவு செய்த, மொபைல் எண்ணில் மட்டுமே, சில முக்கிய தகவல், மாணவ - மாணவியருக்கு அனுப்பப்படும். எக்காரணத்தைக் கொண்டும், மொபைல் போன் எண்ணை மாற்றக் கூடாது.

கல்வி நிலையங்கள், ஆன்லைனில் பெறப்பட்ட விண்ணப்பங்களை, உடனுக்குடன் பரிசீலித்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு, செப்., 30க்குள், 'ஆன்லைனில்' அனுப்பி வைக்க வேண்டும்.கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேவையான ஆவணங்கள் மற்றும் நிபந்தனைகள் ,www.bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htm என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இத்திட்டம் தொடர்பாக, மத்திய அரசால் வெளியிடப்பட்ட, வழிகாட்டி நெறிமுறைகள், www.minorityaffairs.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, தொடர்பு கொள்ளலாம்.

Monday, August 6, 2018

உயர்கல்வி உதவித்தொகை 'ஆன்லைன்' பதிவு துவக்கம்

கல்லுாரி மாணவர்களுக்கான, மத்திய அரசின் உதவித் தொகைக்கு, 'ஆன்லைன்' பதிவு துவங்கியுள்ளது.

பள்ளி படிப்பை முடித்து, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் சார்பில், பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்கள் அமலில் உள்ளன. இதில், ஆண்டுதோறும் மாணவர்கள், ஆன்லைனில் பதிவு செய்த பின், உதவித் தொகை வழங்கப்படும். இந்த அடிப்படையில், ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக, உதவித் தொகை பெற்ற, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை பெறுவதற்கான பதிவு நீட்டிப்பு துவங்கியுள்ளது.

 அதேபோல், புதிதாக உதவித் தொகை பெறவும், ஆன்லைன் பதிவு துவங்கியுள்ளது. இதற்கு, http://scholarship.gov.in/ என்ற மத்திய அரசின் இணையதளத்தில், அக்., 31க்குள் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது.